சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணி, திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயணிகளின் நலன் கருதி தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 11.51, பகல் 12.35, மதியம் 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10 மற்றும் 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30 மணி, 11 மணி, 11.30 மணி, பகல் 12 மணி, 1 மணி, 1.45 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.