கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் மாலா என்கிற பத்மினி. அவரிடம் அதே பகுதியைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பெண்கள் பலர் 1½ லட்சம், 50ஆயிரம், 60ஆயிரம் என பல வகைகளில் சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு கட்டியுள்ளனர்.
ஆனால் அனைவரின் சீட்டு பணத்தையும் பெற்றுக்கொண்ட அவர், பல மாதங்கள் ஆகியும் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் அவரை சந்திக்க சென்ற பொழுது அவரது உறவினர்களும் அவர் எங்கே உள்ளார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக உள்ள நிலையில். அவரை கண்டுபிடித்து தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக பெற்று தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.
மேலும் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எனவே தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்