ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் 5,455 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.43,640 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே விற்பனையாகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் 4,468 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,744 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்றும், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 4,459 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 35,672 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, , வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700ஆகவும் விற்பனையாகிறது.