நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை (gold price) இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,730க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,840க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் தங்கம் ரூ. 5,730க்கும், ஒரு சவரன் ரூ.45,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து கிராம் ரூ.4,694க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,552க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,694க்கும், ஒரு சவரன் ரூ.37,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.