சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படுவதால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையோடு விடாமல், சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளதால், சென்னை வாழ் மக்கள் மத்திய கடும் அச்சம் எழுந்துள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் நகரம் முழுவதும் பிரதான சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 2015-க்கு பிறகு அதிக அளவு கனமழை பதிவாகியிருப்பதால் சென்னைவாசிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.