வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரு வாரமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.
தமிழ் நாட்டின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை குறைவடைந்துள்ள நிலையில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.
இது தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதால் இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், வளசரவாக்கம், போருர், ராமாபுரம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.