சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இன்று(டிச.16) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து(chennai traffic police) காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ்.ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு எனவும், பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு (U) திருப்பம் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு-திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுகொண்டனர்.