தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் சவரனுக்கு ரூ.200 வரை மீண்டும் அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,304 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய மீண்டும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.
அதன் படி இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,504க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4,438 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 70 காசுகள் உயர்ந்து ரூ.65.90க்கு விற்பனையாகிறது.