பாஜக அமைச்சர் நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக அமைச்சர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு வருவாய் துறை அலுவ வர்கள் சேர்ந்து சென்னை ஆற்காட் ரோட்டில் கிட் டத்தட்ட 3100 கோடி மதிப்புள்ள சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் மூலம் மோசடி செய்து உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. 45 நாட்கள் கடந்து விட்டது.
ஆனால் இது வரை திமுக அரசு இந்த மோசடி பதிவை ரத்து செய்யவில்லை. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது FIR போடவில்லை. ஏன்?என்று கேள்வியெழுப்பி இருந்தது.இதனை தொடர்ந்து பாஜக அமைச்சர் நயினார் நாகேரந்திரனின் மகன்மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக MLA நைனார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்னும் நபர் மற்றும் ராதாபுரம் சார்பதிவாளர் சேர்ந்து கூட்டு சதி செய்து சென்னை விருகம்பாக்கம் 100 கோடி மதிப்பிலான நிலத்தை திருநெல்வேலி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒப்பந்த பத்திரப்பதிவு மோசடி ஆவணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆணையிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 2022 இல் நடைபெற்ற மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் ஏப்ரல் 2023 இல் தலைமை செயலர், பத்திர பதிவுத்துறை அமைச்சர், பத்திரப்பதிவுத்துறை செயலர்கள் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் என அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தது.
அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி துணை பத்திர பதிவுத்துறை தலைவர் இது மோசடி ஆவணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்பொழுது பத்திர பதிவுத்துறையால் இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்தும் செய்துள்ளது.
அடுத்தபடியாக மோசடி ஆவணம் பதிவு செய்தவர்கள் மீது FIR பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.