தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று சென்னை நந்தனம் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் இருந்து டர்ன் புல்ஸ் பாயின்ட் நோக்கி சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் இணைப்பு சாலை சந்திப்பில் லிங்க் ரோடு, மாடல் ஹட்மென்ட் ரோடு, விஎன் ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டாமாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு எஸ்.ஐ.டி மற்றும் கேபி தாசன் சாலை வழியாக செல்லலாம்.
சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் நந்தனம் சிக்னல் சந்திப்பில் வி.என்.ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டமாஸ் ரோடு, எஸ்.ஐ.டி மற்றும் கேபி தாசன் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.
தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் செனோடாப் சாலை சந்திப்பில் ஜி.கே.எம் பாலம் நோக்கி கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் பாயின்ட், எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லலாம்.
அண்ணாசாலை மற்றும் செனோடாப் சாலை வழியாக ஜி.கே.எம் பாலம் செல்லலாம். கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக வலதுபுறம் நோக்கி டி.டி.கே ரோடு வழியாக செல்லலாம்.
சேமியர்ஸ் சாலையில் இருந்து சைதாப்பேட்டை செல்ல விரும்பும் வாகனங்கள் ஜிகேஎம் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக காந்தி மண்டபம் பாயிண்ட், எஸ்.வி.படேல் சாலை மார்க்கமாக அண்ணாசாலையை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.