யாருக்கெல்லாம் தமிழ்ப்பேராய விருது – எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Chennai-Patron-Parivendar-announced-the-Tamil-Peraya-Awards-for-the-year-2021
Chennai Patron Parivendar announced the Tamil Peraya Awards for the year 2021

2021ம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்ப்பேராய புரவலருமான பாரிவேந்தர் அறிவித்தார்.

பாரிவேந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா பேரிடர் காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் விழா தவிர்க்கப்பட்டது என்றும் இப்போது கொரோணாவின் தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் தமிழ்ப்பேராய விருது வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு குறித்து பேசிய பாரிவேந்தர், தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் எவ்வளவு பயன் அடைந்துள்ளனர் என்பது லட்சங்களைத் தாண்டியது என்றும் 56 நாடுகளில் இருந்து இங்கு வந்து படிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இங்கு படிக்கிற மாணவர்கள் பல மாநில மாணவர்களோடு பழகும் வாய்ப்பும் அந்த மக்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவர் படித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்ட அவரின் கல்லூரி நாட்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர், ஒரு பொறியியல் மருத்துவம் சார்ந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் இதில் அக்கரை காட்டுவது அறிது என்றும் தமிழ் பற்று, தமிழ் ஆர்வத்தின் மீது இருக்கும் தொடர்ச்சி தான் இந்த தமிழ்ப்பேராய தோற்றம் என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து விருது அறிவிப்புகளை வெளியிட்டார்.  2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள், சிறந்த தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில் தமிழ்ப்பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை பெற தகுதியானவர்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது.

இதில், புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது அ.வெண்ணிலா, முத்துநாகு ஆகியோருக்கும், பாரதியார் கவிதை விருது கடவூர் மணிமாறனுக்கும், ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது பழனி அரங்கசாமிக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது ஆகியவை டில்லி பாபுக்கும் வழங்கப்படும்.

அதேபோல், முத்துத்தாண்டவர் தமிழிசை விருது டி.கே.எஸ்.கலைவாணனுக்கும், பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது சி.மகேந்திரனுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது சி.மகேஸ்வரனுக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மா.பூங்குன்றனுக்கும் வழங்கப்படும்.

பாரிவேந்தர் பைந்தமிழ் விருதை பா.வளனரசும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வெற்றிச் செல்வனும், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதை ராஜபாளையம் மணிமேகலை மன்றமும், அருணாச்சல கவிராயர் விருதை திருபுவனம் ஆத்மநாதன் தமிழிசை குழுவும் பெறுகின்றனர்” என அறிவித்தார்.

Total
0
Shares
Related Posts