மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை – சேலம் விமான சேவை..!!

சென்னை – சேலம் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தினசரி விமான சேவையை மீண்டும் தொடங்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை – சேலம் இடையே விமான சேவை இல்லாமல் பலரும் திணறி வந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அச்சேவை தொடங்கப்பட உள்ளது விமான பயணிகளுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts