சென்னையில் இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் நிறுத்தம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை இன்று 5 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், என பல்வேறு தரப்பினரும் சென்னை புறநகர் ரயில்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இன்றும் நாளையும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில், கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்ளதால் தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் ஒரு மணி வரை இயங்காது.

காஞ்சிபுரம்- சென்ன கடற்கரை, தாம்பரம் – சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் 41 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts