ஐபிஎல் 2024, 34ஆவது லீக் போட்டியில், நேற்று ( CSK VS LSG ) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.ல். ராகுல் பௌவுலிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இருவரும் களமிறங்கினர்.
இதில் ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கேப்டன் ருத்துராஜ் 17 ரன்களில் வெளியேறினார். ரஹானேவும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-ம் பொசிஷனில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவுடன் தனது ஆட்டத்தை ஸ்லோவாகத் தொடங்கினர்.
ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 என்று ஆட்டமிழக்க, மொயீன் அலி ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்தார். இவர்களின் பார்ட்னெர்ஷிப் மேட்சில் நல்ல திருப்பத்தைக் கொண்டுவந்தது. சிஎஸ்கே 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் தனது சிறப்பான ஆடத்தால் ஜடேஜா, ஐபில் 2024ன் 3வது அரை சதத்தை எடுத்தார்.
அப்போது 18ஆவது ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அதே ஓவரில். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழக்க, தோனி களமிறங்கினர். தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி நன்றாக அமைய, 19ஆவது ஓவரில் மட்டும் 2 வைடு, 4, 6, 1, 0, 1, வைடு, 0 என்று மொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் தோனி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சேஸிங் செய்தது .
177 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கேப்டன் கே.ல்.ராகுல் மற்றும் குவிண்டன் டி காக், ஆரம்பத்தில் தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்பிலே முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.
14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 129 ரன்கள் எடுத்தது, இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் சிஸ்கே பௌலர்கள் திணறினர். ஆட்டத்தின் 15வது ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 18வது ஓவரின் முதல் பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19ஆவது ஓவரிகளில் 2 விக்கெட்டுகள் (CSK VS LSG) இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிற்பான வெற்றி பெற்றது.