Site icon itamiltv.com

சென்னை முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தேர்தல் காலத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 21, 22 மற்றும் 23 (வாக்குப்பதிவு நாள்) ஆகிய மூன்று நாட்களிலும், மே 4 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுமையாக மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, அயல்நாட்டு மதுபான சில்லறை கடைகள் மற்றும் பார்களும் செயல்படாது.

மேலும், 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுபான விற்பனை விதிகளின் படி, உரிமம் பெற்ற அனைத்து IMFL கடைகளும் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்களும் குறிப்பிட்ட காலத்தில் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் ஏப்ரல் 23 நள்ளிரவு வரை, பின்னர் மே 4 அன்று முழு நாளும் இந்த தடை அமலில் இருக்கும்.

இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனை நடத்தும் எவரிடமும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version