ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தொடரில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றதை தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் தங்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர் .
இதையடுத்து செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இறுதிச் சுற்றில் அஜர்பைஜான் அணியை 3.5 -0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கம் வென்று தாய் நாட்டிற்கு பெரும் சேர்த்துள்ள நிலையில் அவர்களுக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.