செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை காலி செய்த நபர்…அடுத்து நடந்தது என்ன…?

செல்போனுக்காக நீர்த்தேக்கத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை மோட்டார் பம்பு வைத்து வெளியேற்றிய குற்றத்திற்காக அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. நண்பர்களுடன் அங்குள்ள கேர்கட்டா நீர் தேக்கத்திற்கு சுற்றுலா சென்ற ராஜேஷ் விஸ்வாஸ் என்ற அந்த அதிகாரி, அணையின் மீது நின்று கொண்டு செல்பி எடுத்தபோது திடீரென அவரது செல்போன் தவறி தண்ணீருக்குள் விழுந்தது.

சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனில் முக்கிய தகவல்கள் இருந்ததால் அந்த செல்போனை எப்படியாவது தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும் என்று அவர் முயற்சித்துள்ளார். ஆனால் 15 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் போன் விழுந்துவிட்டதால் அதனை லேசாக வெளியில் எடுக்க முடியவில்லை.

அப்போதுதான் அந்த நபருக்கு இந்த வினோத யோசனை பிறந்தது. உடனே மோட்டார் பம்பை வரவழைத்து தண்ணீரை இறைக்க தொடங்கினார் அந்த புத்திசாலி. கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இறைக்கப்பட்டதில் சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரைக் கொண்டு சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீரை பாய்ச்சலாம்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு ராஜேஷ் விஸ்வாஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மூன்று நாட்களாக தண்ணீரை இறைத்து மீட்கப்பட்ட அந்த செல்போனும் வேலை செய்யவில்லை.

தற்போது செல்போனும் போய், வேலையும் போய் அந்த புத்திசாலி அதிகாரி விசாரணையை எதிர்கொண்டு வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்

Total
0
Shares
Related Posts