சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… – 13 ஆயிரம் வாத்துக்கள் இறந்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

கேரளாவி ஆலப்புழா மாவட்டத்தில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். இப்பறவைகளுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு அவை உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன.

சமீபத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழந்தன. இது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் ஆலப்புழா பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். இறந்து போன பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்சாண்டர், பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நோய் பாதித்த பறவைகளை உடனடியாக புதைக்கவும் ஏற்பாடு செய்தார்.

கேரளாவில் அளவுக்கு அதிகமாக பறவைகள் நோய் தொற்றால் உயிரிழந்து வருவதால், பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts