Site icon itamiltv.com

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை.. முதல்வர் விஜய் பதில் சொல்லனும்- திருமா அட்டாக்!

வந்தே மாதரம் பாடல் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படுவது வழக்கம்.

தற்போது நடைமுறை மாற்றப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.மேலும், இது அதிகாரிகளின் தவறா அல்லது ஆளுநரின் விருப்பமா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் கூறினார்.

Exit mobile version