தேவர் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் .
Also Read : கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்..!!
இந்த நிலையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில், உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.