முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 27ம் தேதி வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10 தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றிருந்தார்.
தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் முனைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இந்த முறை தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : விடுதலை திருநாள் வாழ்த்துகள்! – சீமான்!
இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது,
“வருகின்ற 27ம் தேதி அன்று வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்த பயணம் எத்தனை நாட்களுக்கு இருக்கும் உள்ளிட்டது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்கா பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கா பயணம் தொடர்பான முழு விவரம் விரைவில் முதல்வரின் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.