Site icon ITamilTv

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி – எம்பி எம்எல்ஏ-களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

Breakfast Program

Breakfast Program

Spread the love

மக்களுடன்க்கு முதல்வர் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி வருகிற 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Also Read : வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி மனவர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் அணைத்து அரசுப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டது .

இந்நிலையில் இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காமராஜர் பிறந்தநாள் அன்று தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Spread the love
Exit mobile version