இன்று 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றினார்.
அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர்..
“அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இளம் பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலும், சுமார் 2 லட்சத்து பதினோராயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
கடத்தாண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இத்திட்டதிற்கு, இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.