தவெக-வின் முதல் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது .
மாநாட்டிற்கு ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் வருவார்கள் என்பதாலும் கட்சியின் முதல் மாநாடு என்பதாலும், மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் பார்த்து பார்த்து பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
Also Read : அமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் சமர்ப்பித்த இருவர் கைது..!!
மாநாட்டிற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் இதில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் மூலம் தவெக தலைவர் விஜய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் . மேலும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வரவேண்டாம் எனவும் விஜய் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்