Apple பயனீர்கள் உயிரோட்டமான ஆப் ஸ்டோரில் ChatGPT-ஐ முந்தி சீனாவின் DeepSeek செயலை சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய நவீன காலத்தில் மனிதனின் வேலைகளை குறைக்க பல புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் தொழில்நுட்ப சந்தியில் அறிமுகமாகி வருகிறது . அதில் ஒன்று தான் ChatGPT என்னும் AI கருவி.
இதன் மூலம் நமக்கு தேவையான பல விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும் மேலும் இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிமையாக இருப்பதால் இதனை பல கோடி பேர் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.
Also Read : காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா..? – அன்புமணி காட்டம்..!!
இந்நிலையில் சீனாவின் AI அசிஸ்டண்ட் செயலியான DeepSeek, அமெரிக்காவில் உள்ள Apple ஆப் ஸ்டோரில் ChatGPT-ஐ முந்தி அதிக மதிப்பீடு பெற்ற இலவச செயலியாக மாறியுள்ளது.
DeepSeek செயலி அமெரிக்காவில் கடந்த ஜனவரி 10-ம் தேதி தான் அறிமுகம் செய்யப்பட்டது . DeepSeek மாதிரியைப் பயிற்றுவிக்க வெறும் 47 கோடி ரூபாய் (5.5 மில்லியன் டாலர்கள்) தான் செலவாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது
ChatGPT-யை பயிற்றுவிக்க சுமார் 8,500 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட ChatGPT-யை விட சில கொடிகள் மட்டுமே செலவு செய்து சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் பயனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.