சீயான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாக அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல கெட்டப்புகளை போட்டு மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவரின் வீர தீர சூரன் திரைப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிரம்பி நிற்கிறது.
அருண் குமார் இயக்கத்தில் தரமாக தயாரான இப்படத்தில் விக்ரமுடன் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
Also Read : விளைவுகள் தெரியாமல் விளையாடிய மாணவர்கள் – குஜராத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!
இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க இன்று காலை இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்பே ரிலீஸ் தேதி வெளியிட்டதால், தயாரிப்பு நிறுவனம் மீது B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு நிதி வழங்கியதால் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டம் திட்டியதாக B4U குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் B4U நிறுவனத்திற்கிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை முதல் வீர தீர சூரன் திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.