நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனை அடுத்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிப்படைதோடு பாடங்களை நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.