பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணரின் பழம்பெரும் உலோகச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு Gold of Gods என்ற தலைப்பில் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரையில், இச்சிலையின் புகைப்படம் இருந்துள்ளது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் 2005ல் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 5.2 கோடிக்கு சுபாஸ் சந்திர கபூர் என்பவர் இந்த பழம்பெரும் சிலையை விற்றது தெரியவந்தது .
Also Read : புத்தம் புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்..!!
இந்தியா – அமெரிக்கா தற்போது வரை நட்புடன் இருந்து வருவதால் இருநாடுகளின் கூட்டு முயற்சியில் பிற்கால சோழர் காலமான 1112ம் ஆண்டைச் சேர்ந்த கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோகச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சிலை எந்தக் கோயிலில் இருந்து கடத்தப்பட்டது என்ற விசாரணை தொடங்கி நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.