உலகெங்கும் உள்ள கிரிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டுவரும் நிலையில் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரியும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
உலக அளவில் பல்வேறு இன மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் முதன்மையானதாக கிறிஸ்துமஸ் பண்டிகை திகழ்கிறது .
ஜீசஸ் என்று கிறிஸ்தவ பெருமக்களும், நபி ஈசா (அலை) என முஸ்லிம் பெருமக்களும் போற்றும் அவரது போதனைகள் உலகப்புகழ் பெற்றவை .மதிப்பு மிக்கவை
அவர் பிறந்து 336 ஆண்டுகளுக்குப் பிறகு ரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில், டிசம்பர் 25ஆம் தேதி ரோமானிய தேவாலயத்தில் முதல் முதலாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது .
போப் ஜூலியஸ் அவர்களின் ஆணைப்படி, அதே தேதியில் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இப்பண்டிகையை தொன்று தொட்டு கொண்டாடி வருகிறார்கள் .
Also Read : சூர்யா 44 படத்தின் தலைப்பு வெளியானது..!!
இந்திய திருநாட்டில் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு இப்பண்டிகையில் பங்கேற்பதும், இந்நாட்டில் உள்ள இந்து -இஸ்லாமிய – சீக்கிய உறவுகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும், நமது பெருமைமிகு பாரம்பரியமாக இருக்கிறது .
இந்திய திருநாடு கிறிஸ்தவ மக்களுக்கு பெரிதும் நன்றி கடன் பட்டுள்ளது .
இந்தியாவில் அறிவியல் கல்வியை அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்.
அவர்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் ஏழை -எளியோரும், பின்தங்கியோரும் முன்னேற உதவியது .
இன்று உலக அரங்கில் நவீன சவால்களை எதிர்கொள்ளும் வலிமைமிகு நாடாக இந்தியா உருவாகியதற்கு வித்திட்டவர்கள் அவர்கள்தான் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகை கவலையில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ரஷ்ய- உக்ரைன் போரும், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரும் முடிவுக்கு வரவும், இந்தியாவில் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அமைதி நிலவவும் இத்திருநாளில் பிரார்த்திப்போம் என தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.