நடிகர் விஜய்யின் 50 வது பிறந்த நாளில் நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளது விஜய்யின் அரசியல் பயணத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திரைத்துறையில் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகைகள் வரை அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல..அந்த வகையில் இன்றளவும் கிசுகிசுப்படும் உச்ச நட்சத்திர ஜோடி என்றால் அது விஜய் – த்ரிஷா தான்.
இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளிவந்த 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
மேலும் இந்த படத்தில் , விஜய் -த்ரிஷா கெமிஸ்ட்டி ரசிகர்களை கவர்ந்தது.இதனை தொடர்ந்து, விஜய் -த்ரிஷா, ஆதி, திருப்பாச்சி,குருவி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவே இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக அப்போதே கூறப்பட்டது. மேலும்
படப்பிடிப்பு இல்லாத சமயங்கள் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது போன்ற பல படங்கள் இணையத்தில் வைரலாவது உண்டு.
இதையும் படிங்க: விரைவில் நாம் சந்திப்போம்! -விஜய் கொடுத்த அப்டேட்.. உற்சாகத்தில் மாணவர்கள்
ஆனால் இது குறித்து இருவரும் கண்டுகொள்ளாமல் தங்களது வேலைகளை செய்து வந்தனர். இந்த நிலையில் தான் மீண்டும் விஜய் குறித்து சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும் விஜய்க்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகினர்.
இதன்பின் இந்த தகவல் அப்படியே அமைதியான நிலையில், அடுத்த நடிகை திரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் விஜய்.
மேலும் லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், திரிஷாவிற்கு 35 கோடி ரூபாய்யில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கூட விஜய் வாங்கி கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் , கடந்த 22-ம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு ர் நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.தற்பொழுது அது மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
அவரின் வாழ்த்து பதிவில், ” விஜய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவுடன் ”நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” பாடல் வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.
நடிகை த்ரிஷாவின் இந்த பதிவுக்கு விஜய்யையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ, அதே போல் விஜய்க்கு த்ரிஷா என்றும் த்ரிஷா இல்லனா கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் இல்லனா த்ரிஷா..(TRISHA VIJAY KEERTHI) நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.