ITamilTv

பல்லாவரத்தில் இருந்து பான் இந்தியா… சமந்தாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து..!

Spread the love

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா (samantha ruth prabhu) பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். நடிகையாக மாறினார்.

சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா (samantha ruth prabhu) கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்தார்.

இந்நிலையில், நடிகர் அதர்வா கதாநாயகனாக அறிமுகமான ‘பானா காத்தாடி’ படத்தில் நாயகியாய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. அந்த படத்தில், சமந்தாவின் க்யூட்டான அழகால் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்.

தொடர்ந்து, சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’, சிவகார்த்திகேயனுடன் ‘சீம ராஜா’, தனுஷுடன் ‘தங்க மகன்’ என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

அடுத்து விஜய்யுடன் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என மூன்று திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் சமந்தா.

இப்படி மிகப்பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகும் கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், ‘புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் அசத்தினார்.

இந்நிலையில், சமீபத்தில் சமந்தா நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் ரசிகர்கள் தங்களது ஆதரவை என்றும் கைவிட்டுவிடவில்லை.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை சமந்தாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version