18 வருடங்களுக்குப் பிறகு கமல் மற்றும் ரஜினியின் படங்கள் நேருக்கு நேராக (clash) மோத வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதன்படி, கமலின் “இந்தியன் 2” திரைப்படமும், ரஜினியின் “ஜெயிலரும்” ஒரே நாளில் ரிலீஸ் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில், கடந்த 2005ஆம் ஆண்டு “சந்திரமுகி” திரைப்படமும், அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கமலின் “மும்பை எக்ஸ்பிரஸ்” படமும் வெளியானது.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் சந்திரமுகி 500 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. அதேநேரம், மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
மேலும் தற்போது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் அதேபோல, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தியன் 2 அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர் எனவும், படத்தில் அதிக எண்ணிக்கையில் நடிகர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் (clash) ஆக இருக்கிறது என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.