விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிய்ன் மூலம் பிரபலாமான மணிமேகலையை அவரது கணவர் ஹுசைன் மதம் மாற்றிவிட்டதாக வெளியான சர்ச்சைக்கு மணிமேகலை பதிலளித்துள்ளார்.
வி.ஜே.மணிமேகலை, தான் மதம் மாறி விட்டதாக பொய் செய்தி பரப்பியவருக்கு, ட்விட்டரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்
சன் மியூசிக் ஆங்கராக தனது கரியரை தொடக்கி விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களுக்கு நன்கு பரிச்சயமான வி.ஜே.மணிமேகலை, லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இருவரும் பதிவுத் திருமணம் செய்துக்கொண்டனர்.
அதன் பின்னர், தனக்கு திருமணமான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மணிமேலை, தனக்கு ராமன் – அல்லா இருவரும் ஒன்று தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி அவர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் கடின உழைப்பால் கரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர், மணிமேகலை புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எப்படி ஆரம்பிச்சது.. எப்படி முடிஞ்சிருக்கு பாத்தீங்களா.. லவ்_ஜிகாத். மதமென பிரிந்தது போதும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசிய மணிமேகலை, “எனக்கு எல்லா கடவுளும் ஒன்னு தான். எல்லா கடவுள்களையும் வணங்குகிறேன். நாங்கள் மசூதிக்கு சென்றதை விட ஜோடியாக கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வெளியிட்ட வீடியோக்கள் தான் அதிகமாக போட்டிருக்கிறோம்” என கூறியுள்ளார்.