ITamilTv

நடிகர் ரகுவரன் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்? வெளியான புதிய தகவல்..?

Spread the love

நடிகர் ரகுவரன் 2008 மார்ச் 19ஆம் தேதி தனது 49 வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உயிரிழப்பு குறித்து அவரது சகோதரர் ரமேஷ்வரன் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய வில்லனாக கலக்கி வந்தவர் ரகுவரன். இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அவரது திடீர் மறைவு தமிழ் சினிமாவில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடிகர் ரகுவரன் உயிரிழப்பு குறித்து அவரது சகோதரர் ரமேஷ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர்,

“யாரடி நீ மோகினி படத்தின் கதை ரகுவரனுக்கு பிடித்துப் போனதாலும், கதையில் தனுஷ் கதாபாத்திரம் தனது மகன் ரிஷியை நினைவு படுத்தியதாலும் அந்த படத்தில் நடிக்க ரகுவரன் ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது.

அதிலும் குறிப்பாக, ரகுவரன் கேரக்டர் மக்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்தது. யாரடி நீ மோகினி படத்தின் டப்பிங் பணிகளை முடித்த பின்னர், ரகுவரன் மனச் சோர்வுடன் காணப்பட்டார். அதற்கு பின்னர் யாருடனும் அவர் பேசாமல் இருந்தார். பின்னர், படம் வெளியாவதற்கு முன்பாகவே திடீரென உயிரிழந்துவிட்டார்” என்று கூறினார்.

இதற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ரகுவரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மன அழுத்தமும் அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது என அவரது சகோதரர் கூறியுள்ளார்.

மேலும், விக்ரம் நடிப்பில் 2009 இல் வெளியான கந்தசாமி படத்திலும், விக்ரமுடன் ரகுவரன் நடித்திருந்தார். ஆனால், படப்பிடிப்பின் போது பாதியிலேயே அவர் உயிரிழந்து விட்டதால் அவர் நடித்த காட்சிகள் எல்லாம் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியை வைத்து மீண்டும் படமாக்கப்பட்டது.


Spread the love
Exit mobile version