Site icon ITamilTv

நடிகர் கவினுக்கு டும் டும் டும்? பொண்ணு யாரு…? வைரலாகும் தகவல்!

Spread the love

சீரியலில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் லிப்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிபிடித்தார் கவின்.

டாடா திரைப்படத்தை கவினின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் தான் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இது ஒரு எதார்த்தமான கதையாக இருந்தாலும், புதுவித கோணத்தில் எடுக்கப்பட்டதால் டாடா திரைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தற்போதைய கால்கட்டத்த்தில் ஒரு இளைஞரின் சூழ்நிலையை மையமாக வைத்து டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டது. அந்த கதையின் படி ஒரு கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ரசிகர்களிடையே டாடா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் பலரும் கவின் நடிப்பிற்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் திரையரங்கில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஓடிடியிலும் டாடா சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் வேகமாக தகவல்கள் கசிந்து வருகிறது.

ஆனால், இந்த தகவல் குறித்து நடிகர் கவினோ அல்லது அவரது நெருங்கிய வட்டத்தினரோ இதுவரை எந்தவித உறுதியான தகவலும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version