இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன்(Maamannan) திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் மாமன்னன்(Maamannan) திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்தது.
சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களும் திருமாவளவன்,தனசேகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உதயநிதியின் , ‘மாமன்னன் படம் ம ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 510 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மேலும் திரைக்கு வந்த ஒன்பது நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது.இந்த நிலையில் மாமன்னன்’ திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் வரும் 27ம் தேதி வெளியாகிறது.