Site icon ITamilTv

”33 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சன்..” -ரஜினி உருக்கம்!!

Spread the love

33 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை ரஜினி (rajini) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் காட்சிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இதற்காக மும்பை வந்த ரஜினி படப்பிடிப்பு பகுதியில் அமிதாப் பச்சனை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த்,

”33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version