Site icon ITamilTv

The Road | த்ரிஷாவின் ‘தி ரோடு’ ட்ரெய்லர்.. யூ டியூப் ட்ரெண்டிங்கில்!!

Spread the love

த்ரிஷா நடிப்பில், அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘தி ரோடு’. இந்த படம் கடந்த 2000ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதையில், மதுரையில் என்எச்44 நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த விபத்துகளின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற விசாரணையில் த்ரிஷா இறங்குகிறார்.

த்ரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை ட்ரெய்லரில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான மூட்-ஐ சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கச்சிதமாக கடத்துகிறது.

மேக்கப் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ் தன்மையுடன் படத்தில் தோன்றுகிறார் த்ரிஷா. இதற்கு முன்னர் நாயகியை மையப்படுத்தி வெளியான அவரது படங்களின் சறுக்கல்களை ‘தி ரோடு’ திரைப்படம் சரிசெய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் திரிஷா.

இந்நிலையில், ‘தி ரோடு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது யூடியூபில் 4 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து யூ டியூபில் 3வது ட்ரெண்டிங்கில் உள்ளது.


Spread the love
Exit mobile version