ITamilTv

வடிவேலு – உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர்…

Spread the love

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு – உதயநிதி நடிக்கும் மாமன்னன்(maamannan) படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் தான் மாமன்னன்(maamannan).இப்படத்தில் கதாநாயகியாக ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

மாமன்னன்(maamannan) திரைப்படம் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என கூறப்படுவதால்,திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை6.00மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்காக பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில் மாமன்னன்(maamannan) படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


Spread the love
Exit mobile version