லியோ(leo) திரைப்படம் வெற்றி பெற வேண்டி, படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்(lokesh-kanagaraj) திருப்பதியில் வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.
மேலும், லியோ படத்திலிருந்து வெளியாகியுள்ள மூன்று பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், லியோ படம் வெற்றி பெற வேண்டி தனது படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி மலையேறி வியாழக்கிழமை காலை சாமி தரிசனம் செய்துள்ளார்.
தற்பொழுது திருப்பதியில் லோகேஷ் கனகராஜின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.