தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் (Citizenship Act) தனது உரையை 4 நிமிடத்திலேயே முடித்துக் கொண்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி முவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவையில் நிராகரிக்கப்பட்டது.
மேலும் உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் கூறியதாவது :
கேலோ இந்தியா போட்டிகளில் முதன்முறையாக தமிழகம் அதிக பதக்கங்களை பெற்று 2ம் இடம் பெற்றது. இந்தியாவின் வளர்ச்சியை விட, தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம்.
இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்றிய அரசை பாராட்டுகிறேன் . ஜி.எஸ்.டி இழப்பீட்டு முறையை மத்திய அரசு நிறுத்தியதால், தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான தொகையை 50:50 பங்கிட்டுக்கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசு, அதற்கான நிதியுவதி அளிக்க ஒப்புதல் அளிக்கவில்லை.
குற்றச்செயல்களை தடுப்பதில் அரசு சமரசமின்றி ஈடுபட்டு வருகிறது. குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைவருக்குமான சமூக நீதியை பின்பற்றவும், பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது
நடப்பு கல்வியாண்டி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ளனர். இதனால் பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. இலவச பேருந்து பயண திட்டத்தால், பெண்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்
தமிழகத்தில் சமூக நல்லிணத்தை பேணி பாதுகாப்பதில் அரசு கவனமாக உள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Act) ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம்.
சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் அரசு முன்னுரிமை அளிக்கும்
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது, சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்களை வைத்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/metro-works-traffic-transformation-in-chennai/
விவசாயிகள் நலன்கள் மேம்பட, 190 கோடி செலவில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த விவசாய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை காக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
காவிரியில் புதிய அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என அப்பாவு தெரிவித்தார்