ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியது. இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பரவல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்திய பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளையும் அதிப்படுத்தி உள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் அதிக அளவிலான ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படுள்ளது. மகாராஷ்டிராவில் 510 பேருக்கும் டெல்லியில் 351 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.