Site icon ITamilTv

விவசாயிகளுக்கு குட் நியூஸ் .. 50,000 பேருக்கு இலவச மின்சாரம்.. தமிழக அரசு!!

Spread the love

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 50,000 விவசாயிகளுக்கு (farmers) இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 50ஆயிரம் விவசாயிகளுக்கு (farmers) நாளை மறுநாள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், முதல் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

அதையடுத்து, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக, வரும் (27.07.23) வியாழக்கிழமை அன்று திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கி கவுரவிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love
Exit mobile version