முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை தவிர பெரிதாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை” என செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (04.09.24) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..:
“மரியாதை நிமித்தமாக தான் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தேன். முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் சில கருத்துகளை அவரிடம் பரிமாறிக் கொண்டேன்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு, தமிழகத்தில் புதிதாக எந்த நிறுவனமும் தொடங்கப்படவில்லை. யாருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு சைக்கிள் ஓட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதை பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிதாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை.
பிரதமர் மோடி மீதான நல்லெண்ணத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு இப்போது ஓரளவுக்கு முதலீடுகள் வருகிறது. பிரதமரைப் பற்றி எதையெல்லாம் எதிர்த்துப் பேசினார்களோ, இப்போது அதையெல்லாம் தான் திமுக அரசு நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது.
நான் விஜய்க்கு ஆதரவாக பேசவில்லை. மாநாடு நடத்தவிட முடியாமல் விஜய் கட்சியை திமுக அரசு முடக்குவது ஏன்? மாநாடு நடத்த இடம் கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை?
நடிகர் விஜய் பாவம். ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். விஜய் மீது ஏன் திமுகவுக்கு அவ்வளவு பயம்? மாநாடு நடத்த இடத்தை கொடுத்தால், மடத்தை பிடித்து விடுவார் என திமுகவிற்கு பயம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.