மழலைகளுடன் உரையாடிய முதல்வர்! – இனிப்புக்கள் வழங்கி வரவேற்றார்.

cm-stalin-welcomes-school-children-with-sweets
cm stalin welcomes school children with sweets

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிதிருந்த நிலையில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

cm-stalin-welcomes-school-children-with-sweets
cm stalin welcomes school children with sweets

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, சென்னை மடுவங்கரை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் பள்ளியிலிருந்து புறப்படும்போது, வாசலில் நின்று கொண்டிருந்த பெற்றோர்களிடமும் நலம் விசாரித்தார்.

Total
0
Shares
Related Posts