திடீர் உடல் நலக்குறைவு: பழ.நெடுமாறனை நேரில் நலம் விசாரித்த முதல்வர்!!

உடல்நல குறைவால் பாதிக்கபட்ட பழ.நெடுமாறன் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(CM Stalin), அவரிடம் உடல்நலம் விசாரித்தார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த சில காலமாக வயது முப்பு காரணமாக உடல் நிலை குறைவால் அவ்வப்போது அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் (ராமச்சந்திரா மருத்துவமனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

இந்த நிலையில்,மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது எதிர்பாரத விதமாக கால்முறிவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மதுரை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழ.நெடுமாறனின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Total
0
Shares
Related Posts