பழனியில் முருகன் மாநாடு நடத்தும் திமுக அரசு இதே வேகத்தில் சென்றால் 2026 தேர்தலுக்கு முன் முதல்வரே ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக்கொள்கை வேலைக்கு ஆகாது என திமுகவுக்கு தெரிந்துவிட்டது. எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
Also Read : வினேஷ் போகத் விவகாரம் – மன்சுக் மாண்டவியா விளக்கம்..!!
பழனியில் முருகன் மாநாடு நடத்தும் திமுக அரசு இதே வேகத்தில் சென்றால் 2026 தேர்தலுக்கு முன் முதல்வரே ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார். சேகர் பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார். இதே வேகத்தில் சென்றால் அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிடுவார்கள்.
தமிழக மீனவர் பிரச்சனையில் இலங்கை – இந்தியா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.