கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் 2 ஆண்டுகளில் 3.71 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
Also Read : சீனாவில் சரிவை கண்ட திருமணங்களின் எண்ணிக்கை..!!
அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட 94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
கோவை உள்ளபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி போதைப்பொருள் கடத்தல் என பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து குற்றங்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடித்து வருகிறது.