Site icon ITamilTv

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் collection Report

collection Report

collection Report

Spread the love

சந்தானத்தின் குதூகலமான நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் லேட்டஸ்ட் (collection Report) வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களுக்கு பெயர்போன நடிகர்கள் வெகு சிலரே அந்த ஒரு சிலரில் அனைவர்க்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் தான் சந்தானம் .

அறிமுக நடிகர் முதல் சூப்பர் ஸ்டார் வரை திரையுலகில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த சந்தானம் இன்று தமிழ் சினிமாவின் கலக்கல் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அந்தவகையில் தற்போது சந்தானத்தின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மேகா ஆகாஷ், ரவி மரியா, மாறன் .

மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

படம் முழுக்க காமெடிகளை குவித்திருக்கும் படக்குழு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நல்லபடி ஒர்க்கவுட் ஆகியுள்ளதால் இப்படம் நடிகர் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம்

உலகளவில் முதல் இரண்டு நாட்களில் (collection Report) ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

Also Read : https://itamiltv.com/rameswaram-fishermen-arrested/

என்னதான் நடிகர் சந்தானம் ஹீரோவாக கலக்கி வந்தாலும் அவரது படங்கள் ஒரு சில காரணங்களுக்காக எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் ஓடாமல் இருந்து வந்தது.

அதனால் வடக்குப்பட்டி ராமசாமி படமும் நினைத்த அளவுக்கு ஓடுமா ஓடாதா என படக்குழு சற்று குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருவது படக்குழுவுக்கு மன நிம்மதியை கொடுத்துள்ளது.


Spread the love
Exit mobile version