அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இந்திய -ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.அதன்படி அஸ்சி அணிக்கு எதிராக கடினமான இலக்கை வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் வழக்கம் போல் நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 47 ரன்களில் ஆட்டமிழக்க கில்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.பின்னர் ஷ்ரேயஸ் ஐயரும் வந்த வேகத்தில் நடையை கட்டினார். நிலைத்து நின்று ஆடிய கோலி அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்ததால் மைதானமே சிறிது நேரம் அமைதியானது.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது . வழக்கம் போல் ஸ்ப்ரிங் மேன் டேவிட் வார்னர் மற்றும் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்
அபாரமான ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் ஷமி வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து விளையாடிய ஹெட் மற்றும் லபுஷேன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்தனர் . அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . மறுபக்கம் லபுஷேன் அரை சதம் கடந்து அசத்தினார் .
பின்னர் 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் என்ற இலக்கை எளிதாக கடந்தது ஆஸ்திரேலியா அணி . இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன் . உலகக்கோப்பையை அந்த 6 வது முறையாக வென்று சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும், ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியுமான வினி மேக்ஸ்வெல் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு வாழ்த்து தெரிவிப்பதா ? என நெட்டிசன்கள் விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர்.
வினி மேக்ஸ்வெல் பதிலடி:
இந்த நிலையில், நெட்டிசன்களின் கருத்துக்கு வினி மேக்ஸ்வெல் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனிப்பட்ட முறையில் வெறுப்புடன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்னைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.